News
வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
Et harum quidem rerum facilis est et expedita distinctio. Nam libero tempore, cum soluta nobis est eligendi optio cumque nihil impedit quo.
படையப்பா
கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன், ராதாரவி என பலரும் நடித்திருந்தனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிலையில், 25 ஆண்டுகள் கழித்து படையப்பா படத்தை வருகிற 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதுகுறித்து ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் படையப்பா படம் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
ரீ-ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ப்ரீ புக்கிங்கில் படையப்பா பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை நடந்த முன் பதிவில் மட்டுமே ரூ. 30 லட்சம் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் வரவேற்பு ஆகும்.
