News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை க்ரித்தி ஷெட்டி!
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
க்ரித்தி ஷெட்டி
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் வெளிவந்த சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. இதன்பின் தெலுங்கில் வெளிவந்த உப்பண்ணா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம்தான் வா வாத்தியாரே. இதை தொடர்ந்து LiK, ஜீனி ஆகிய படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் மஹான் அல்ல படத்தில் ஒரு சிறுமிதான் க்ரித்தி ஷெட்டி என பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் க்ரித்தி ஷெட்டி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
“நான் மஹான் அல்ல படத்தில் வர சின்ன பொண்ணு நான் தான் என்று வந்த மீம் பொய். அதை ரொம்ப ஆணித்தனமா வேறு போட்டு இருக்காங்க. என் நண்பர்கள் கூட தானான்னு அந்த பொண்ணுன்னு கேட்டாங்க. நான் 11 வயசுல தான் நடிக்கவே ஆரம்பிச்சேன், அதுகூட ஒரு விளம்பரத்துல தான் நடிச்சேன். ஆனா அந்த படத்துல வந்தது நான் இல்லை” என கூறியுள்ளார்.
