News

அஜித்-விஜய் இதை செய்ய ஒப்புக்கொள்வார்களா?… என்ன விஷயம் தெரியுமா?

Posted on

அஜித்-விஜய்

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகர்களாக இருந்தவர் ரஜினி-கமல்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, பட விழாக்களுக்கு வருவது என அதிகம் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அடுத்து கொண்டாடப்படும் அஜித்-விஜய் அப்படி இல்லை.

பல வருடங்களுக்கு முன்பு சில நிகழ்ச்சிகளில் இவர்களை ஒன்றாக பார்த்திருப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவர்களை ஒன்றாக பார்ப்பது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாக உள்ளது.

வைரல் தகவல்

அஜித்-விஜய் ரசிகர்களுக்கு இந்த ஏக்கம் அதிகம் உள்ளது என்றே கூறலாம். ஆனால் தற்போது ரசிகர்கள் பல நாள் ஏங்கிய விஷயம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது அஜித்தை வைத்து மங்காத்தா என்ற படத்தையும் விஜய்யை வைத்து கோட் என்ற படத்தையும் இயக்கியவர் வெங்கட் பிரபு. வரும் நவம்பர் 7ம் தேதி இவருக்கு 50வது பிறந்தநாளாம்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வெங்கட் பிரபு தரப்பில் அஜித்-விஜய்க்கு அழைத்து விடுத்துள்ளார்களாம். ஆனால் இவர்கள் வருவார்களா என்பது தெரியவில்லை, இது நடக்க வேண்டும் என்ற மட்டும் ரசிகர்கள் இப்போதே கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version